இந்தியா- இலங்கை மோதிய போட்டி: சானியா மிர்சாவின் டுவிட் இதுதான்

Report Print Santhan in கிரிக்கெட்
349Shares
349Shares
lankasrimarket.com

இலங்கை அணிக்கெதிரான போட்டியின் போது டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கம் ஆன் இந்தியா என்று டுவிட் செய்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.

இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.

இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி அடுத்து வங்கதேச அணியுடனான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சா இந்தியா- இலங்கை அணிகள் மோதிய போட்டி தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பதிவேற்றம் செய்து, கம் ஆன் இந்தியா எனவும் இந்த வீட்டில் இருக்கும் ஒரு தொலைக்காட்சியாலாவது தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் ஓடிக் கொண்டே தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்