இந்திய அணியுடன் தோல்வி: இலங்கை அணிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சவால்

Report Print Santhan in கிரிக்கெட்
873Shares
873Shares
ibctamil.com

இந்திய அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக வங்கதேச அணியுடனான போட்டியில் இலங்கை அணி கட்டாய வெற்றியை நோக்கி உள்ளது.

இலங்கையில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன.

இதில் முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணி அடுத்த போட்டியில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது.

அதன் பின் நேற்று இந்தியாவுடன் நடந்த போட்டியிலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. இதுவரை மூன்று போட்டிகளில் மோதியுள்ள இலங்கை அணி 1 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

வங்கதேச அணி ரன் ரேட் அடிப்படையில் 1 வெற்றியுடன் மூன்றாவது இடத்திலும், இந்திய அணி இரண்டு வெற்றிகளுடன் முதல் இடத்திலும் உள்ளது.

இலங்கை அணிக்கு இன்னும் ஒரு போட்டியே உள்ளது. அந்த போட்டியும் வங்கதேச அணியுடன் வரும் 16-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கை அணி இறுதிப் போட்டியை நினைத்து பார்க்க முடியும், என்பதால் இலங்கை அணிக்கு வங்கதேச அணியுடனான போட்டி மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

மேலும் வங்கதேச அணிக்கு இலங்கை போட்டியைத் தவிர இந்திய அணியுடனும் ஒரு போட்டி உள்ளது. அப்போட்டி நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்