ஐசிசி டெஸ்ட் தரவரிசை: உச்சம் தொட்ட ரபாடா

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
311Shares
311Shares
lankasrimarket.com

ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா முதலிடம் பிடித்தார்.

இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4-ம் இடத்தில் இருக்கிறார்.

900 புள்ளிகளைக் கடந்த 23-வது பவுலரானார் ரபாடா. தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை பிலாண்டர் (912), ஷான் போலக் (909) டேல் ஸ்ட்யென் (909) ஆகியோருக்குப் பிறகு 4வது தென் ஆப்பிரிக்க பவுலராக ரபாடா 900 புள்ளிகளைக் கடந்துள்ளார்.

ஜோஷ் ஹேசில்வுட் 4ம் இடத்திலிருந்து 5ம் இடம் செல்ல அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 5ம் இடத்திலிருந்து 9ம் இடத்துக்கு பின்னடைந்தார். ரவீந்திர ஜடேஜா 3-ம் இடத்தில் நீடிக்கிறார்.

துடுப்பாட்டத் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் நீடிக்கிறார், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 2ம் இடத்தில் நீடிக்கிறார். புஜாரா 6-ம் இடத்தில் இருக்கிறார்.

ஏ.பி.டிவில்லியர்ஸ் 5 இடங்கள் முன்னேறி டாப் 10க்குள் பிரவேசித்து 7ம் இடத்தில் உள்ளார்.

ஹஷிம் ஆம்லா 9ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார், லுங்கி இங்கிடி 12 இடங்கள் முன்னேறி 37வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

உஸ்மான் கவாஜா 5 இடங்கள் முன்னேறி 16-ம் இடத்திற்குச் சென்றுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்