இந்தியா- வங்கதேசம் போட்டியை உன்னிப்பாக கவனிக்கும் இலங்கை அணி?

Report Print Santhan in கிரிக்கெட்

முத்தரப்பு டி20 தொடரில் இன்றை இந்திய, வங்கதேச அணிகளுக்கிடையேயான போட்டியை இலங்கை அணி உன்னிப்பாக கவனிப்பதற்கு வாய்ப்புள்ளது.

இலங்கை, வங்கதேசம், இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால், இறுதிப் போட்டிக்கு போவது உறுதி என்பதால் அந்தணி வெற்றிக்காக போராடும்.

அதசமயம் வங்கதேச அணியும் இன்றைய போட்டியை சும்மாவிடப் போவதில்லை, அந்தணியும் கட்டாய வெற்றியை நோக்கி உள்ளது.

வங்கதேச அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டியை நினைத்து பார்க்க முடியும். அதே வேளை இலங்கை அணியும் இந்த போட்டியை உன்னிப்பாக கவனிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 1 வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் 1 வெற்றி 1 தோல்வியுடன் மூன்றாவது இடத்தில் உள்ள வங்கதேச அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் இரண்டாவது இடத்தை பிடித்துவிடும், இலங்கை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்.

அதுமட்டுமின்றி வரும் 16-ஆம் திகதி வங்கதேச அணியுடான போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் அப்போது தான் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு கிடைக்கும்.

இன்றைய போட்டியில் வங்கதேசமும், வரும் 16-ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றுவிட்டால் இரண்டு அணிகளும் இரண்டு வெற்றியுடன் இருக்கும், அதே போன்று இந்திய அணியும் இரண்டு வெற்றியுடன் இருக்கும் என்பதால் ரன் ரேட் அடிப்படையில் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்