ஐசிசி டி20 தரவரிசை: சரசரவென முன்னேறிய இலங்கை மற்றும் இந்திய வீரர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

முத்தரப்பு டி20 தொடர் முடிந்துள்ள நிலையில் புதிய டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடந்து முடிந்த முத்தரப்பு தொடரில் பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில் தரவரிசையில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இறுதி போட்டியில் கலக்கிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் 126-வது இடத்திலிருந்து 95-வது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில் முதல் முறையாக 246 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் 12 இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளார்.

அதே போல வாஷிங்டன் சுந்தரும் 151 இடங்கள் முன்னேறி 31வது இடத்துக்கு வந்துள்ளார்.

இலங்கை வீரர்கள் குசல் பெரேரா, குசல் மெண்டீஸ், அகில தனஞ்செயா ஆகியோரும் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்