தமிழில் பேசவே பிடிக்கும்: தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய அணியில் விளையாடினாலும் தமிழில் பேசவே தனக்கு பிடிக்கும் என தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது.

இதனால் ஒரே நாளில் கிரிக்கெட் ரசிகர்களின் ஹீரோ ஆனார் தினேஷ் கார்த்திக்.

இந்நிலையில் தமிழ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி இருக்கும்போது வாய்ப்புகளை பயன்படுத்துவது அவசியமாகும்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி தனிப்பட்ட முறையில் எனது மிகச்சிறந்த இன்னிங்ஸாகும், அப்போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முடியும் என நம்பினேன்.

இந்திய அணியில் விளையாடினாலும் எனக்கு தமிழில் பேசவே பிடிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்