தமிழனாக இருந்து இந்த அணிக்கு விளையாட முடியவில்லையே? தினேஷ் கார்த்திக் கவலை

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் தமிழனாக இருந்து சென்னை அணிக்காக விளையாடமல் இருப்பது தற்போது வரை வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

இலங்கையில் முத்தரப்பு டி20 தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் இறுதிப் போட்டியின் போது வங்கதேச அணியை, இந்திய அணி வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.

இப்போட்டியின் போது, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஹீரோவான தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கைப் பற்றி தான் கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் என பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அப்போது அவர் என்னுடைய நீண்ட நாள் ஆசை ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்பதே, நான் உள்ளூர் தொடர்களிலும் தமிழக அணிக்காக ஆடியுள்ளேன்.

ஆனால் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட முடியாமல் போவது மிகுந்த வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும்உள்ளூர் போட்டிகளில் தமிழக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலே, அது நேரடியாக இந்திய அணிக்கு கொண்டு செல்ல போதுமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்