இலங்கை முத்தரப்பு தொடரில் கிடைத்த வாய்ப்பை வீணடித்த இந்திய வீரர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் இந்திய வீரர்களான ரிசப் பாண்ட், உடன்கட், மொகமத் சிராஜ் ஆகியோர் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொள்ள தவறிவிட்டனர்.

இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்றது. இத்தொடரில் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியின் சீனியர் வீரர்களான டோனி, கோஹ்லி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்படி கொடுக்கப்பட்ட வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டாலும் சில இளம் வீரர்கள் கொடுத்த வாய்ப்பை வீணடித்துவிட்டனர்.

அந்த வகையில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு தேர்வான மொகது சிராஜ்க்கு இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அப்போட்டியில் சிராஜ் 4 ஓவர்கள் வீசி 50 ஓட்டங்கள் வாரி வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இதனால் அவருக்கு இறுதிப் போட்டியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

இதற்கு அடுத்தபடியாக அணியின் வேகப்பந்து வீச்சாளரும், இந்திய அணியில் வளர்ந்து வரும் வீரரான ஜெயதேவ் உடன்கட் மீது இப்போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி 139 ஓட்டங்கள் வாரி வழங்கினார். அவரின் சராசரி இந்த தொடரில் 9.92-ஆக இருந்தது.

மூன்றாவது வீரராக இந்திய அணியின் அடுத்த டோனி என்றழைக்கப்பட்ட ரிஷப் பாண்ட் தான், Syed Mushtaq Ali Trophy மற்றும் Vijay Hazare Trophy-ல் வெளுத்து வாங்கிய ரிஷப் பாண்ட் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டால் முதலிரண்டு போட்டிகளில் ரசிகர்களை ஏமாற்றினார்.

இதன் காரணமாகவே அடுத்த வந்த போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்