மன்னிப்பு கோரினார் டேவிட் வார்னர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தன்னுடைய செயலுக்கு டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு வீரரான பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து டேவிட் வார்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், உலகளவிலான மற்றும் அவுஸ்திரேலிய ரசிகர்களுக்கு: தற்போது நான் சிட்னிக்கு திரும்பி கொண்டிருக்கிறேன்.

தவறுகள் நிகழ்ந்து அதனால் கிரிக்கெட்டுக்கு சேதம் உண்டாகியுள்ளது.

என் தரப்பில் மன்னிப்பு கேட்டு கொள்வதோடு, நடந்ததற்கு பொறுப்பும் ஏற்று கொள்கிறேன்.

இதனால் விளையாட்டுக்கும் அதன் ரசிகர்களுக்கும் துயரம் நேர்ந்துள்ளதை உணர்கிறேன்.

நான் சிறிது நேரம் இளைப்பாற வேண்டும், என் குடும்பம், நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

சில நாட்களில் என்னிடமிருந்து செய்தியை எதிர்பார்ப்பீர்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்