அடேங்கப்பா! மைதானத்தை அதிர வைத்த CSK ரசிகர் பட்டாளம்

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டதை காண, மைதானத்தில் ரசிகர்கள் பெருந்திரளாக கூடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் டி20 தொடர் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதனை காண ரசிகர்கள் மைதானம் முழுவதும் கூடியிருந்தது வியப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி பங்கேற்க உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலாக காத்திருக்கின்றனர்.

டோனி தலைமையிலான சென்னை அணி, தனது முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 7ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ செயலி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி ரசிகர்கள், சென்னை அணியின் ஜெர்சி உள்ளிட்ட மெர்சண்டைஸ்களையும், போட்டிக்கான டிக்கெட்டுகளையும் வாங்கிக் கொள்ளலாம்.

கடந்த திங்கட்கிழமை வெளியான இந்த செயலியை, இதுவரை சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

CSK

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்