சன்ரைசர்ஸ் அணியின் புதிய அணித்தலைவர் இவர் தான்

Report Print Kabilan in கிரிக்கெட்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய அணித்தலைவராக, நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால், டேவிட் வார்னருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஓர் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது.

மேலும், சன்ரைசர்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சன்ரைசர்ஸின் அணித்தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்திய வீரர்களில் ஒருவர் அணித்தலைவராக தெரிவு செய்யப்படுவார் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில், நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் புதிய அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

AFP PHOTO/STR

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்