காண்போரை உலுக்கிய ஸ்டீவ் ஸ்மித்தின் கண்ணீர்: பகிரங்க மன்னிப்பு கோரினார்

Report Print Raju Raju in கிரிக்கெட்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தன்னை மன்னித்துவிடுமாறு கூறி ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரையும் உலுக்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கண்ணீர் மல்க செய்தியாளர்களை இன்று சந்தித்த ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், என்னால் கோபமும் ஏமாற்றமும் அடைந்த அனைத்து அவுஸ்திரேலிய ரசிகர்களும் என்னை மன்னித்து விடுங்கள்.

கேப்டவுனில் நடந்த விடயத்துக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். முடிவெடுப்பதில் பெரிய தவறிழைத்து விட்டேன்.

நல்லவர்கள் தவறு செய்வார்கள், நடந்ததை அனுமதித்ததன் மூலம் நான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டேன். என் முடிவில் மிகப்பெரிய பிழையைச் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்.

எனக்குத் தெரிந்தவரை இப்படி முன்பு நடந்ததில்லை. முதல் முறையாக நடந்து விட்டது, இனி இப்படி நடக்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

மக்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்