புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: நம்பர் 1 இடத்திலிருந்த ஸ்மித் நிலை என்ன?

Report Print Raju Raju in கிரிக்கெட்
398Shares

புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்துள்ள நிலையிலேயே பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டனை பெற்ற அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

விராட் கோஹ்லி இரண்டாமிடத்திலும், ரூட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

வில்லியம்சன் மற்றும் வார்னர் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். இலங்கையின் சண்டிமால் பனிரெண்டாவது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஆண்டர்சன் இரண்டாமிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் பிலண்டர் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

இலங்கையின் ரங்கனா ஹெரத் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்