இன்று ஐபிஎல் முதல் போட்டி: டோனி எந்த நிலையில் களம் இறங்குவார் தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி தன் வழக்கமான டவுன் ஆர்டரிலிருந்து சற்று முன்னரே களமிறங்குவார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கவுள்ளது. தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டில் நுழைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் ஆளுமை நிரம்பிய தலைவர் டோனியின் தலைமையில் களமிறங்குவதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டோனி கடந்த சில குறைந்த ஓவர் போட்டிகளில் சரிவர ஆட முடியாமல் போன நிலையில் தன்னை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்த முறை டோனி தன் வழக்கமான டவுன் ஆர்டரிலிருந்து சற்றே முன்னமேயே களமிறங்குவார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் டோனி 6-ம் நிலையில் களமிறங்கிய போது அவரது சராசரி 27.50 ஸ்ட்ரைக் ரேட் குறைவான 113%தான்.

4ம் நிலையில் தோனி இறங்கியபோது சராசரி 35.83, ஸ்ட்ரைக் ரேட் 141 ஆகும். 5-ம் நிலையில் தோனி இறங்கிய போது சராசரி 46.12, ஸ்ட்ரைக்ரேட் 147.72.

எனவே புள்ளி விவரங்கள் அடிப்படையில் தோனி 5-ம் நிலையில் களமிறங்குவதே சரியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers