இப்படிப் போட்ட எப்படி அடிக்கிறது? பாண்டேவை மைதானத்தில் கீழே விழ வைத்த பிராவோ

Report Print Santhan in கிரிக்கெட்

மும்பை அணிக்கெதிரான போட்டியின் போது பாண்டேவை தன்னுடைய யார்க்கர் பந்தின் மூலம் பிராவோ அவரை விழ வைத்ததார்.

சென்னை-மும்பை அணிகள் மோதிய முதல் போட்டி ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

விறுவிறுப்பான இப்போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் டேவைன் பிராவோ சிக்சர் மழை பொழிந்து அணியை வெற்றி பெற வைத்தார்.

துடுப்பாட்டத்தில் மட்டுமின்றி பந்து வீச்சிலும் நேற்று பிராவோ தனிக் காட்டு ராஜாவாக இருந்தார். இவரது கடைசி கட்ட இரண்டு ஓவர்களை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அடிக்க முடியாமல் திணறினர்.

அப்போது ஒரு கட்டத்தில் பிராவோ வீசிய யார்க்கர் பந்தை பாண்டே அடிக்க முற்பட்ட அது எதிர்பாரதவிதமாக அந்த பந்து காலில் பட்டு கீழே விழுந்து புரண்டுள்ளார். அதுமட்டுமின்றி அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் ஓட்டம் ஓடும் போதும் நிலை தடுமாறி கீழே விழுந்த இவருக்கு சென்னை அணி வீரர்கள் உதவினர்.

இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...