அசத்திய இளம் வீரர்: புகழ்ந்து தள்ளிய மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட மும்பை அணி வீரருக்கு அணி பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே பாராட்டு தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதிய நிலையில் சென்னை அபார வெற்றி பெற்றது.

அதே நேரத்தில் மும்பை வீரர்களின் செயல்பாடும் மெச்சும்படியாக இருந்தது.

முக்கியமாக அந்த அணியின் இளம் வீரர் மாயங்க் மர்கண்டே 23 ஓட்டங்கள் மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

மாயங்கின் செயல்பாடு அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனேவை ஈர்த்துள்ளது.

Credit: BCCI/IPL

இது குறித்து ஜெயவர்தனே கூறுகையில், மாயங்க் பிரமாதமாக பந்து வீசினார், நாங்கள் முதலில் அவரை எங்கள் அணி குழுவில் பார்த்தபோது அவருக்கு ஆதரவு கொடுத்தோம்.

மாயங்க் சிறப்பான வீரர் என்பது எனக்கு தெரியும், டி20 கிரிக்கெட்டில் அதிகம் விளையாடா விட்டாலும் அவர் மிகுந்த நம்பிக்கையுடனே காணப்பட்டார்.

அவரது அணுகுமுறை சிறப்பாக இருந்தது. இது போன்ற இளம் வீரர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டியது நமது கடமை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்