ஐபிஎல் பார்க்க நடிகைக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்த CSK வீரர்: யார் அவர் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்
401Shares
401Shares
lankasrimarket.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான பிராவோவிற்கு பிரபல நடிகை டிக்கெட் வாங்கிக் கொடுத்தற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி கடந்த 7-ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் டேவைன் பிராவோ 30 பந்துகளுக்கு 68 ஓட்டங்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான நாடசா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிராவோவுக்கு நன்றி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் என்னுடைய நண்பர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். மும்பை அணிக்கெதிரான போட்டியின் போது அவனது ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது.

Go Bravo Go! என்று குறிப்பிட்டு மும்பை ஹோட்டலில் பிராவோவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, இந்த போட்டியை பார்ப்பதற்கு எனக்கு ஸ்பெஷல் டிக்கெட் வாங்கிக் கொடுத்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்