சென்னை அணியின் தோல்விக்கு காரணமான ரன் அவுட்! துல்லி குதித்த பிரித்தி ஜிந்தா

Report Print Santhan in கிரிக்கெட்
499Shares
499Shares
ibctamil.com

பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின் போது அம்பத்தி ராயுடுவின் ரன் அவுட்டே ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இதில் சென்னை-பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணிக்கு கெய்ல் ருத்ரதாண்டவம் ஆட இறுதியாக அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் குவித்தது.

கடினமான இலக்கு தான் என்றாலும், சென்னை அணி இது போன்ற இலக்குகளை பல முறை எட்டியுள்ளதால் சென்னை அணியின் ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.

அதே போன்று சென்னை அணியும் வெற்றி இலக்கிற்கு அருகில் வந்து 193 ஓட்டங்கள் எடுத்து 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சென்னை அணி சார்பில் நட்சத்திர வீரரான டோனி 44 பந்துகளுக்கு 79 ஓட்டங்கள் குவித்தார். இப்போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் அம்பத்தி ராயுடுவின் ரன் அவுட்டை கூறலாம்.

டோனியும்-அம்பத்தியு ராயுடுவும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த போது ராயுடு 49 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர சரன் பந்து வீச்சை எதிர்கொண்டார்.

வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்

அதை ஆப் திசையில் அதிவேகமாக அடித்த ராயுடு டோனியை பார்க்கமால் ரன் ஓடினார். அடித்த வேகத்தில் பந்தை பிடித்த அஸ்வினோ துல்லியமாக ஸ்டம்ப்பை நோக்கி எறிய ராயுடு பரிதாபமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்த ரன் அவுட்டைக் கண்ட பிரித்தி ஜிந்தா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

இவர் பெளலியன் திரும்பியவுடன் சென்னை அணியின் ரன் விகிதமும் சீரான விகிதத்தில் குறையத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்