துடுப்பாட்டத்தை துவங்கிய சென்னை அணி: மீண்டும் வந்த டூபிளிசிஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்
161Shares
161Shares
ibctamil.com

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை துவங்கியுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், இரண்டாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில், சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றது.

ஆனால், ஐதராபாத் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தெரிவு செய்தார். இதனால் தற்போது சென்னை அணி முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கியுள்ளது.

இந்த போட்டியில், இம்ரான் தாஹிருக்கு பதிலாக பாப் டூபிளிசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்