ஐபிஎல் சென்னை போட்டிகள் புனேயில் இருந்து லக்னோவுக்கு மாற்றம்?

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரின் புனேயில் நடைபெற ‘Play off' சுற்றின் 2 ஆட்டங்கள் லக்னோவுக்கு மாற்றப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக, கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காவிரி போரட்டம் காரணமாக, சென்னையில் நடைபெற இருந்த எஞ்சிய 6 ஆட்டங்கள் புனேக்கு மாற்றப்பட்டது. இதில் ஒரு ஆட்டம் கடந்த 20ஆம் திகதி நடந்தது.

ஏற்கனவே புனேயில் Play off சுற்றின் இரண்டு ஆட்டங்கள் நடத்தப்பட இருந்தது. ஆனால், சென்னையில் நடைபெற இருந்த ஆட்டங்கள் இங்கு மாற்றப்பட்டதால், Play off சுற்று ஆட்டங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில், கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், ‘புனேவில் நடைபெற இருந்த Play off சுற்றின் இரண்டு ஆட்டங்கள் லக்னோவுக்கு மாற்றப்படலாம் என தெரிகிறது.

50 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் லக்னோவில் ஸ்டேடியம் உள்ளதால், அங்கு மாற்றப்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல கொல்கத்தா, ராஜ்கோட் ஆகிய நகரங்களும் இதற்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்