ஓய்வு குறித்து மனம் திறந்த யுவராஜ் சிங்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவ்ராஜ் சிங், 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண தொடருக்கு பிறகு தனது ஓய்வு குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர் யுவ்ராஜ் சிங் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணிகாக விளையாடினார். அவரின் ஆட்டம் சிறப்பாக இல்லாததால், அவரால் அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முடியவில்லை.

மேலும், தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் போட்டியிலும் அவரின் ஆட்டம் பெரிதாக இல்லை. பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் யுவ்ராஜ் சிங், இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் வெறும் 36 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்நிலையில் தனது ஓய்வு குறித்து அவர் கூறுகையில், ‘2019ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பேன். 2019க்குப் பிறகு என் முடிவை அறிவிப்பேன்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். 17 - 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, நிச்சயம் 2019க்குப் பிறகு ஓய்வு குறித்து அறிவிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 2019 உலகக் கிண்ணப் போட்டிக்கு பிறகு யுவ்ராஜ் சிங் ஓய்வு பெறுவது உறுதியாகிவிட்டது.

Twitter

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers