மீண்டும் மோசமான செயலை செய்த மும்பை அணி வீரர்: வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் முக்கியமான கட்டத்தில் நோ-பால் வீசிய பும்ராவை மும்பை ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய நிலையில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது.

குறித்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 28 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பும்ரா 19-வது ஓவரை வீசினார்.

முதல் பந்தை ஆர்ச்சர் பவுண்டரிக்கு அனுப்ப, அடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்நிலையில் மூன்றாவது பந்தை மிகப்பெரிய நோ-பாலாக பும்ரா வீசினார்.

தொடர்ந்து எதிர்முனையில் வந்த துடுப்பாட்ட வீரர் கவுதம் இரண்டு பவுண்டரிகள் உட்பட எஞ்சிய 4 பந்தில் 10 ஓட்டங்கள் விளாசினார்.

பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் கவுதம் அணியை வெற்றிபெறவும் வைத்தார்.

இந்நிலையில் முக்கியமான நேரத்தில் நோபால் வீசுவதை வழக்கமாக கொண்டுள்ள பும்ராவை டுவிட்டரில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers