கடந்த போட்டியில் டோனி விட்ட அந்த கேட்சும் தோல்விக்கு முக்கிய காரணம்: இது தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது டோனி பட்லருக்கு விட்ட கேட்சும் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சென்னை அணி கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதியது. இப்போட்டியில் சென்னை அணியின் மோசமான பீல்டிங்கால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் பட்லர் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸர் தான் ஆட்டத்தின் வெற்றியையே மாற்றியது.

ஆனால் அதற்கு முன் பிரோவோ வீசிய பந்தில் பட்லர் கொடுத்த கேட்சை டோனி பிடித்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும்.

அதாவது, போட்டியின் பிராவோ வீசிய 18-வது ஓவரில் கொடுத்த கேட்சை தோனி பிடிக்க தவறிவிட்டார். பிராவோவின் பந்தை பட்லர் லெக் சைடில் அடிக்க, அந்தப் பந்து லேசாக பேட்டில் பட்டு பின்னாடி சென்றது.

டோனி லெக் சைடில் தாவி பிடிக்க முயன்றார். ஆனால், பிடிக்க முடியாமல் விட்டுவிட்டார். அப்போது, பட்லர் 52 பந்துகளில் 80 ஓட்டங்கள் எடுத்து இருந்தார்.

அப்போது பட்லர் விக்கெட் விழுந்திருந்தால் நிச்சயம் ராஜஸ்தான் அணி நிச்சயம் தோல்வியை தழுவி இருக்கும். பட்லர் 65 பந்துகளில் 95 எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் ராஜஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers