மைதானத்தில் ஜடேஜாவின் முகத்தில் பந்தை வைத்து அடிக்க நினைத்த டோனி: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் போது ஜடேஜாவை டோனி பந்தை வைத்து மிரட்டுவது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் ஹைதராபாத் அணி சற்று முன் வரை 16 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் 7-வது ஓவரின் முடிவில் சென்னை அணி வீரர் ஜடேஜாவை அணியின் தலைவர் டோனி பந்தை வைத்து மிரட்டியுள்ளார்.

ஆனால் ஏன் அப்படி செய்தார் என்பது குறித்து தெரியவில்லை. தற்போது இந்த வீடியோவை இணையவாசிகள் டோனி மற்றும் ஜடேஜாவின் செல்லச் சண்டை என்று குறிப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers