இதான் டோனி மனசு! CSK வீரர் ராயூடு சதமடிக்க டோனி காட்டிய பெருந்தன்மை

Report Print Raju Raju in கிரிக்கெட்
481Shares
481Shares
ibctamil.com

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை வீரர் ராயுடு சதமடிக்க அணித்தலைவர் டோனி களத்தில் பெருந்தன்மையோடு நடந்து கொண்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய 46-வது போட்டியில் சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 180 ஓட்டங்களை இலக்காக கொண்டு சென்னை அணி இரண்டாவதாக களமிறங்கிய நிலையில் தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றிம் அம்பதி ராயுடு இருவரும் அபாரமாக விளையாடினார்கள்.

ஒருகட்டத்தில் ராயுடு 90 ஓட்டங்களை கடந்து விளையாடி கொண்டிருந்த இருந்த போது மறுமுனையில் இருந்த டோனி அவர் சதமடிக்க பெருந்தன்மையாக உதவினார்.

அதாவது, 19-வது ஓவரின் ராயுடு 99 ஓட்டங்களுடன் களத்தில் இருக்க அணி வெற்றிக்கு 3 ஓட்டங்கள் மட்டுமே தேவையிருந்த நிலையில் டோனி விளையாடினார்.

டோனி 4 அல்லது 6 ஓட்டங்கள் எடுத்திருந்தால் அணி வெற்றி பெற்றிருக்கும், ஆனால் ராயுடு சதமடிக்க வேண்டும் என்ற நோக்கில் டோனி ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்தார்.

பின்னர் ராயுடு ஒரு ஓட்டம் எடுத்து சதமடித்தார், இதையடுடுத்து டோனி மீண்டும் ஒரு ஓட்டம் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்