எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது: ஹைதராபாத் வெற்றிக்கு பின் பேசிய டோனி

Report Print Santhan in கிரிக்கெட்
641Shares
641Shares
ibctamil.com

புனேவில் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த பந்துவீச்சு அணியான ஹைதராபாத் அணியையே துவம்சம் செய்த சென்னை அணியை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் வெற்றிக்கு பின்பேசிய டோனி, முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என்று நினைத்தேன்.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து ஸ்விங் ஆகாமல் இருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

துவக்க வீரர்களான ராயுடுவும், வாட்சனும் அபாரமாக துவக்கம் கொடுத்தனர், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை இருவரும் வீணாக்காமல் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

நான் இந்த ஐபிஎல் துவங்குவதற்கு முன்பே ராயுடுவிற்கான இடத்தை ஒதுக்கிவிட்டேன், நான் வைத்துள்ள சிறந்த வீரர்கள் பட்டியலில் அம்பத்தி ராயூடுவும் ஒருவர்.

அவர் நினைத்த அளவிற்கு அதிரடியான ஆட்டக்காரராக இல்லை என்றாலும், தேவையான போது நேர்த்தியான ஷாட்கள் அடிப்பதில் கில்லாடி, இதே போன்று தான் கீதர் ஜாவையும் 4 அல்லது 5-வது இடத்தில் இறக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

சில காரணங்களால் சென்னையில் விளையாட முடியாமல் போனது, இருப்பினும் இங்கு புனேவிலும் ரசிகர்களின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்