டெல்லிக்கு எதிராக வெற்றி பெற்றது எப்படி? விராட் கோஹ்லி சொன்ன ரகசியம்

Report Print Kabilan in கிரிக்கெட்
120Shares
120Shares
ibctamil.com

பந்து வீச்சை முதலில் தெரிவு செய்தது தான், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதற்கான காரணம் என பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

டெல்லி டேர்டிவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 182 ஓட்டங்கள் இலக்கை விரட்டி பிடித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் விராட் கோஹ்லி 40 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம், Target Chasing-யில் தான் ஒரு சிறந்த வீரர் என்பதை கோஹ்லி மீண்டும் நிரூபித்துள்ளார்.

மேலும், இனி வரும் போட்டிகளிலும் இதே பாணியை பின்பற்ற அவர் முடிவு செய்துள்ளார். கோஹ்லிக்கு உறுதுணையாக விளையாடிய டிவில்லியர்ஸ், 37 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இதுகுறித்து விராட் கோஹ்லி கூறுகையில், ‘நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால், எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். Chasing என்பது சிறந்தது.

அந்த தருணத்தில் முதலில் பந்து வீசுவது தான் சிறந்த யோசனையாக இருந்தது. ஏனெனில், அது துடுப்பாட்ட வீரர்களுக்கு கடமையை எடுத்துக் கொள்வதில் எளிமையாக இருக்கும். அப்போது உங்களுக்கு பிடித்தவாறு விளையாட்டை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

அதைத் தான் எங்கள் வீரர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள், டிவில்லியர்ஸுடன் விளையாடியது சிறந்த அனுபவம். கடந்த காலங்களில் இதை நாங்கள் பலமுறை செய்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்