பிளே ஆப் சுற்றுக்கு தேறுமா? தோல்விக்கு பின் புலம்பிய மும்பை அணித்தலைவர் ரோகித்

Report Print Santhan in கிரிக்கெட்
306Shares
306Shares
ibctamil.com

ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பின் மற்ற போட்டிகளின் முடிவும், அடுத்து வரும் போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணி பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும்.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் லீக் போட்டிகளுக்கான சுற்றுகள் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது.

இதில் கடந்த முறை சாம்பியனான மும்பை இந்த முறை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்றைய போட்டிக்கு முன் தொடர்ந்து வெற்றி பெற்றாலே பிளே ஆப்புக்கு தகுதி பெற்றுவிடலாம் இருந்த மும்பை அணி, நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியால், மற்ற அணிகளின் முடிவையும், அடுத்து வரும் போட்டிகளில் கட்டாய வெற்றியை நோக்கியும் உள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பின் பேசிய ரோகித், இப்போட்டியில் நாங்கள் 20 ஓட்டங்கள் குறைவாக எடுத்துவிட்தாகவும், அதுவே அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று புலம்பியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்