இந்த ஒரு தோல்வியால் மாறிபோச்சே! அஸ்வின் வேதனை

Report Print Santhan in கிரிக்கெட்
567Shares
567Shares
ibctamil.com

பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வி மிகவும் கஷ்டமாக இருப்பதாக பஞ்சாப் அணியின் தலைவர் அஸ்வின் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான் பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

இப்போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதால், போட்டியில் பரபரப்பு என்று பார்த்தால், பஞ்சாப் அணியை, பெங்களூரு அணி துவம்சம் செய்து, அந்தணியை 88 ஓட்டங்களுக்குள் சுருட்டியது.

அதன் பின் ஆடிய பெங்களூரு அணி 8.1 ஓவரிலே இந்த ஓட்டத்தை அசால்ட்டாக எட்டிப் பிடித்து அசத்தல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்விக்கு பின் பேசிய அஸ்வின், இந்த தோல்வி மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நிச்சயமாக இந்த போட்டியில் ஒரு சாதரண கிரிக்கெட் வீரரை போன்று கூட விளையாடவில்லை.

இந்த ஒரு தோல்வியின் மூலம், நாங்கள் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டோம். ரன் ரேட்டையும் இழந்துவிட்டோம்

இருப்பினும் இதில் இருந்து மீண்டு மும்பை மற்றும் சென்னை அணியுடனான அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்