திரும்ப வந்துட்டோம்னு சொல்லு! ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து கெத்து காட்டி வரும் சென்னை

Report Print Santhan in கிரிக்கெட்
384Shares
384Shares
ibctamil.com

ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி தொடர்ந்து 9-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்றது. வெற்றிகரமாக நடைபெற்று வரும் இந்த தொடர் தற்போது 11-வது ஆண்டில் அடியெடுத்து நடைபெற்று வருகிறது.

இந்த 2018-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த 7-ஆம் திகதி நடைபெற்றது. கிட்டத்தட்ட லீக் தொடர் முடியவுள்ள நிலையில் இரண்டு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

அதில் ஒன்று சென்னை, ஹைதராபாத், இதில் ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் இந்த பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதன் மூலம் சென்னை அணி 9வது முறையாக ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணி, விளையாடிய 9 தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

இதை சென்னை அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் திரும்ப வந்துட்டோம்னு சொல்லு என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்