கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு எவ்வளவு லாபம் தெரியுமா? வெளியானது அறிவிப்பு

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த சாதனைகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிகர லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டு லாபங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், 2017-ஆம் ஆண்டு 2.12 பில்லியன் ரூபாய்கள்(14 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிகர லாபம் 33 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டை விட இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உத்திபூர்வமான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சாதுரியமான நிதி நிர்வாகத்தினால் விளைந்ததாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் புதிராக லாபம் அதிகரித்தது பற்றி விரிவாக இலங்கை கிரிக்கெட் வாரியம் எதையும் கூறவில்லை. அதே சமயம் 2017-ல் ஜிம்பாபவே, இந்தியா, வங்கதேச தொடர்கள் இலங்கையில் நடந்ததும் லாப அதிகரிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு இலங்கை அணியின் ஆட்டம் அந்தளவிற்கு இல்லை. இந்தியாவுக்கு எதிராக தொடரை இழந்தார்கள், அதுமட்டுமின்றி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உள்நாட்டு தொடரையும் இழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்