ஐபிஎல் போட்டியில் அணி மாறிய மும்பை வீரர் பாண்ட்யா-பஞ்சாப் வீரர் ராகுல்

Report Print Santhan in கிரிக்கெட்
545Shares
545Shares
ibctamil.com

மும்பையில் நடைபெற்ற நேற்றைய போட்டியின் முடிவுக்கு பின் மும்பை வீரர் ஹார்திக் பாண்ட்யா, பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுல் தங்கள் அணியின் பனியன்களை மாற்றிக் கொண்டனர்.

மும்பையில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்-மும்பை அணிகளுக்கிடையேயான முக்கியமான போட்டியில் மும்பை அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பஞ்சாப் அணிக்காக கடைசி வரை போராடிய துவக்க வீரர் ராகுல் 94 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அவர் பெளலியன் திரும்பிய பின்னர் தான் மும்பை அணி வீரர்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

இந்நிலையில் இப்போட்டியின் முடிவுக்கு பின் மும்பை அணி வீரர் ஹார்திக், பஞ்சாப் வீரர் ராகுல் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக் கொண்டனர்.

அப்போது இரு வீரர்களும் தங்களது பனியன்களை மாற்றிக்கொண்டனர். ராகுல் மும்பை அணியின் பனியனையும், பாண்டியா பஞ்சாப் அணியின் பனியனையும் அணிந்து கொண்டனர்.

கால்பந்து போட்டியில் தான் வீரர்கள் இது போன்று பனியன்களை மாற்றிக் கொள்வார்கள், ஆனால் கிரிக்கெட் போட்டியில் இவர்கள் இப்படி மாற்றிக் கொண்டதை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் டிரண்டாக்கி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்