பொல்லார்ட்டை வெளியில் உட்கார வைத்ததால் மிகவும் வருத்தப்பட்டார்: மும்பை வீரர் ரோகித் சர்மா

Report Print Santhan in கிரிக்கெட்
342Shares
342Shares
ibctamil.com

மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரரான பொல்லார்டை விளையாடும் பதினொரு பேருக்கான அணியில் சேர்க்காததால், அவர் வருத்தப்பட்டதாக அந்தணியின் தலைவர் ரோகித்சர்மா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப்-மும்பை அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டியில் மும்பை அணி கடைசி கட்டத்தில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 13 போட்டிகளில் 6 வெற்றி 7 தோல்வி என 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்கு பின் பேசிய ரோகித், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

இது மிகவும் முக்கியமான போட்டி என்பதால், என்ன எல்லாம் எதிர்பார்த்தோமோ அதை எல்லாம் எங்கள் வீரர்கள் செய்து முடித்தார்கள்.

இந்த மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமான மைதானம் என்பதால், அதிக ஓட்டங்கள் எடுக்க முடியும். இருப்பினும் மிடில் ஆர்டரில் நாங்கள் தடுமாறிவிட்டோம்.

பொல்லார்ட் எப்போதும் எங்கள் அணிக்கு மேட்ச் வின்னராக இருந்துகொண்டிருக்கிறார். கடந்த சில போட்டிகளில் அவரை விட்டுவிட்டு விளையாடினோம்.

அது எப்போதும் கடினமான முடிவுதான். விளையாடும் பதினொரு பேருக்கான அவர் சேர்க்கப்படாததற்கு வருத்தப்பட்டார்.

டுமினி கடைசிக்கட்ட ஓவர்களில் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாததால் பொல்லார்டுக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்க நினைத்தோம். அவர் அழுத்தமான சூழ்நிலைகளில் எப்போதும் நன்றாக ஆடக்கூடியவர். அதை அவர் சரியாகவே செய்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்