கோஹ்லி அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய வில்லியம்சன்: கடைசி ஓவரில் போராடி வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்
286Shares
286Shares
lankasrimarket.com

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

ஐபிஎல் தொடரின் இன்றைய 51-வது லீக் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இதையடுத்து பெங்களூரு அணிக்கு பார்தீவ் பட்டேல், விராட் கோஹ்லி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பார்தீவ் பட்டேல் 1 ஓட்டத்திலும், விராட் கோஹ்லி 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து வந்த டிவில்லியர்ஸ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை காட்ட ஆரம்பித்தார். இவருக்கு இணையாக மொயின் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூரு அணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் எகிறியது.

இருவரும் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் வெளுத்து வாங்கியதால், டிவில்லியர்ஸ் 32 பந்தில் அரைசதமும் மொயின் அலி 25 பந்தில் அரைசதமும் அடித்து அசத்தினார்.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இருவரில் டிவில்லியர்ஸ் 69 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, மொயின் அலி 65 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, கடைசி கட்டத்தில் வந்த கொலின் டி கிரான்ட்ஹோம் 17 பந்தில் 40 ஓட்டங்கள் அடிக்க பெங்களூரு அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்கள் எடுத்தது.

ஹைதராபாத் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் ரசித்கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

219 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக தவான், ஹெல்ஸ் களமிறங்கினர்.

இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்ததால், தவான் 18 ஓட்டங்களிலும், அலக்ஸ் ஹெல்ஸ் 37 ஓட்டங்களிலும் வெளியேற ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து மூன்றாவது வீராக களமிறங்கிய வில்லியம்சன், மற்றொரு வீரரான மனீஷ் பாண்டேவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூரு அணி பந்து வீச்சாளர்கள் மிரண்டு போய்விட்டனர்.

கோஹ்லி அடுத்தடுத்து பந்து வீச்சாளர்களை மாற்றிய போதும் பாண்டே ஒரு புறம் பவுண்டரி, சிக்ஸர் விளாச, வில்லியம்சன் சிக்ஸர் பவுண்டரி என விளாச இந்த இமாலய இலக்கை ஹைதராபாத் அணி எட்டி விடும் என்றளவிற்கு இருந்தது.

வில்லியம்சன் கடைசி ஓவரின் முதல் பந்தில் 81 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற ஹைதராபாத் அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்து 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்விய சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்