ஸ்பைடர்மேனை நேரில் பார்த்தேன்: டிவில்லியர்ஸை புகழ்ந்து தள்ளிய கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்
243Shares
243Shares
ibctamil.com

ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது, ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்ததாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்-யில் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.

பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 69 ஓட்டங்களும், மொய்ன் அலி 34 பந்துகளில் 65 ஓட்டங்களும் குவித்தனர்.

முன்னதாக பெங்களூரு அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஐதராபாத் அணி வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் அடித்த பந்தை, எல்லைக் கோட்டில் நின்றிருந்த டிவில்லியர்ஸ் பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்து பிரமிக்க வைத்தார்.

இதனைப் பார்த்த அணித்தலைவர் விராட் கோஹ்லி, உடனடியாக ஓடி வந்து டிவில்லியர்ஸின் தலையில் தட்டிக் கொடுத்தார். இந்நிலையில் இதுகுறித்து விராட் கோஹ்லி கூறுகையில்,

‘வெற்றி உணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. பனியின் தாக்கம் இருந்தது. ஆனால், பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டிவில்லியர்ஸ், மொய்ன் அலி, கிராண்ட் ஹோம் துடுப்பாட்டம் அபாரமாக இருந்தது.

எல்லைக் கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘Spiderman' போல் இருந்தது. இதை நீங்கள் சாதாரண மனிதனாக இருந்தால் செய்ய முடியாது. அவரது பீல்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது.

அவரது Shots இன்னமும் எனது பிரமிப்பில் இருந்து செல்லவில்லை. இந்த வெற்றி உத்வேகத்தை கடைசி போட்டியில் கொண்டு செல்வோம். தற்போது 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அமைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மொயின் அலி தனது பணியை நன்றாக செய்தார், அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இரு கைகளிலும் நன்றாக பிடித்து கொண்டுள்ளார்.

எங்களது சொந்த மைதானமான பெங்களூரில் இது கடைசி ஆட்டம், ரசிகர்களின் ஆதரவு அற்புதமாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

BCCI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்