நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்ற CSK: வெற்றிக்கு பின்னர் கெத்தாக பேசிய டோனி

Report Print Raju Raju in கிரிக்கெட்

2018 ஐபிஎல் போட்டி தொடரில் விளையாடும் சிறந்த அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது என டோனி கூறியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர் 1 ஆட்டத்தில் ஐதராபாத் - சென்னை அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் இறுதி போட்டிக்குள் சென்னை அணி நேரடியாக நுழைந்துள்ளது.

வெற்றிக்கு பின்னர் பேசிய அணித்தலைவர் டோனி, இந்த பாராட்டுகள் எல்லாம் பின்வரிசை வீரர்களுக்கே சேரும், நெருக்கடியான கட்டத்தில் அவர்கள் டு பிளிஸ்சுக்கு ஜோடியாக நின்று வெற்றியை தேடி தந்தனர்.

இந்தப்போட்டி தொடரில் விளையாடும் சிறந்த அணிகளில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம்.

இறுதிப்போட்டிக்கு நுழைந்தது மிகவும் மகிழ்ச்சியானது, இந்த வெற்றி முக்கியமானது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...