ராஜஸ்தான் அணியை விரட்டியடித்த கொல்கத்தா: வெற்றி சூட்சமத்தை வெளியிட்ட தினேஷ் கார்த்திக்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை தோற்கடித்த பின்னர் அது குறித்து கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியது.

வெற்றிக்கு பின்னர் பேசிய கொல்கத்தா அணித் தலைவர் தினேஷ் கார்த்திக், நாங்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தோம்.

இந்த வகையான போட்டிகளில் ஓட்டங்கள் முக்கியம் என்பதை விட நம்பிக்கை தான் முக்கியம், எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடியதோடு, நல்ல விதமாக பந்துவீசினார்கள் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers