ஐபிஎல்லில் இவர் தான் கிங்: புதிய சாதனைக்கு தயாரான சென்னை வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா, ஐ.பி.எல்-லில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில், மேலும் சாதனையை படைக்க உள்ளார்.

ஐ.பி.எல்-லின் 11வது சீசனில் தற்போது Play Off சுற்றுகள் நடந்து வருகின்றன. இந்த தொடர் முடிய மொத்தமாக 3 போட்டிகளே உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா, தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை தன்னிடம் வைத்திருந்தார் ரெய்னா.

ஆனால், பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி அவரை முந்திவிட்டு முதலிடம் பிடித்தார். இந்நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் 22 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், ரெய்னா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும், அடுத்த சீசன் வரை ரெய்னாவே முதலிடத்தில் நீடிப்பார். ரெய்னா இதுவரை 175 ஆட்டங்களில் 4,953 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இதில் ஒரு சதம் மற்றும் 35 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச Score 100*. இந்நிலையில், இறுதிப் போட்டியில் ரெய்னா 47 ஓட்டங்கள் எடுத்தால், ஐ.பி.எல் வரலாற்றில் 5,000 ஓட்டங்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இந்த சீசனில், சுரேஷ் ரெய்னா 14 ஆட்டங்களில் விளையாடி 413 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers