டிவில்லியர்ஸின் ஓய்வு அறிவிப்பு: வருத்தம் தெரிவிக்கும் பிரபல வீரர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வீரர் டிவில்லியர்ஸின் திடீர் ஓய்வு அறிவிப்பை அறிந்த நட்சத்திர வீரர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான ஏபி டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள டிவில்லியர்ஸின் ஓய்வு முடிவு குறித்து முன்னாள் நட்சத்திர வீரர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்

உங்கள் On field ஆட்டம் போல் களத்துக்கு வெளியேயும் 360 டிகிரி வெற்றிக்கு வாழ்த்துக்கள். உங்களை நிச்சயமாக Miss பண்ணுவோம். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

கங்குலி

Weldone ஏபி டிவில்லியர்ஸ்! கிரிக்கெட் உலகில் உங்களின் பங்களிப்புக்கு நன்றி. விளையாட்டு உலகம் உங்களை என்றும் மறக்காது. நீங்கள் சாம்பியன் வீரர்.

மஹேல ஜெயவர்த்தனே

வாழ்த்துகள் ஏபி டிவில்லியர்ஸ். சிறந்தவர்களில் ஒருவர் நீங்கள். அபாரமான வீரர். அனைத்திற்கும் மேலாக மிகச்சிறந்த நபர்.

வி.வி.எஸ்.லக்ஷ்மண்

வாழ்த்துக்கள் ஏபி டிவில்லியர்ஸ். அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை. உங்களுடைய நேர்த்தியான கிரிக்கெட் திறமையாலும், உங்களின் நன்நடத்தையாலும் நீங்கள் தொடர்ந்து பல கிரிக்கெட் வீரர்களுக்கு முன் உதாரணமாக இருப்பீர்கள். ஓய்வுக்கு பிறகான உங்களின் வாழ்க்கை மிகவும் சந்தோசமாக அமைய வாழ்த்துகள்

மார்க் பவுச்சர்

தென் ஆப்பிரிக்காவுக்காக இவர் முதலில் வந்த நாள் நினைவில் உள்ளது. என்ன ஒரு அகத்தூண்டுதல்? வீரர் இவர்!! நாட்டுக்காக, சக வீரர்களுக்காக, ரசிகர்களுக்காக நீங்கள் செய்த அனைத்துக்கும் நன்றி.

ஜாக் காலிஸ்

உங்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். ஓய்வுக்கு பிறகான நேரங்களில் உங்களின் குடும்பத்தோடு நேரத்தை செலவழியுங்கள். உங்களை இளைஞனாக பார்த்து இருக்கிறேன். இன்று உலக கிரிக்கெட்டின் மிக முக்கிய நபர்.

ஷாகித் அப்ரிடி

நான் மிகவும் போற்றும் விக்கெட்டில் உங்களை வீழ்த்தியதும் ஒன்று. பெரும்பாலான நேரங்களில் உங்களை வீழ்த்துவது சவால்தான். ஆச்சரியகரமான உங்கள் கிரிக்கெட்டுக்கு வாழ்த்துக்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...