உங்கள் அன்புக்கு மிக்க நன்றி: டிவில்லியர்ஸின் உருக்கமான பதிவு

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ், தனது ஓய்வு குறித்து அறிந்து கலங்கியவர்களுக்கும், வாழ்த்தியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் அதிரடி துடுப்பாட்ட வீரர் டிவில்லியர்ஸ் நேற்று முன்தினம் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இது ரசிகர்கள் மட்டுமன்றி, கிரிக்கெட் வீரர்கள் இடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனினும் ரசிகர்கள், சக வீரர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவரும் அவருக்கு பிரியாவிடை கொடுத்து தங்களது அன்பையும், ஆதரவையும் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமக்கு கிடைத்த ஆதரவை நினைத்து நெகிழ்ந்த டிவில்லியர்ஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, என்னை புரிந்துகொண்டமைக்கும், எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கும் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், எனது சக அணிவீரர்கள் மற்றும் எதிரணி வீரர்களுக்கு நன்றி.

கடந்த சில நாட்களாக நான் உணர்ச்சிகரமாகவும், கடினமான மனநிலையிலும் இருந்தேன். ஆனால், உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்! #இது என் வாழ்க்கைக்கான உந்து சக்தி’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் தலைவர் கிறிஸ் நென்ஸனியும், டிவில்லியர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...