ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதல்! வீடியோ வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதவிருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டதால், பிக்ஸிங் செய்யப்பட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்தியாவில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய இரண்டாவது குவாலிபையர் போட்டியில் கொல்கத்தா-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி, வரும் ஞாயிற்றுக் கிழமை சென்னை அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும்.

இந்நிலையில் ஐபிஎல்.போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்தின் மொபைல் ஆப் விளம்பரத்தால், இறுதிப் போட்டி ஏற்கனவே பிக்ஸிங் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

குறித்த விளம்பரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களை காட்டி ஐபிஎல்., இறுதிப் போட்டியை காண தவறாதீர்கள் என ஒளிபரப்பட்டுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஐபிஎல். இறுதிப் போட்டி, ஏற்கனவே பிக்ஸிங் செய்யப்பட்டுவிட்டதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...