ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானின் சுழலில் வீழ்ந்த வங்கதேசம்

Report Print Kabilan in கிரிக்கெட்
338Shares
338Shares
lankasrimarket.com

ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித்கானின் அபார சுழற்பந்து வீச்சினால் வங்கதேச அணி தோல்வியை தழுவியது.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.

இத்தொடரின் முதல் ஆட்டம் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் நேற்று நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேசம் முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி துடுப்பாட்டத்தை துவங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது ஷாசத் 40 ஓட்டங்களும், ஷென்வாரி 36 ஓட்டங்களும் எடுத்தனர்.

AP

வங்கதேச அணி தரப்பில் அபுல் ஹசன், மக்முதுல்லா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய வங்கதேச அணியில் நட்சத்திர வீரர் தமிம் இக்பால் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர், ரஷித்கானின் மாயாஜால சுழற்பந்து வீச்சில் வங்கதேச அணியின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் முஜிபுர் ரஹ்மானும் தனது சுழலில் மிரட்ட, 19 ஓவர்களில் 122 ஓட்டங்களுக்கு வங்கதேசம் ஆல்-அவுட் ஆனது.

AP

இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக லிதான் தாஸ் 30 ஓட்டங்களும், மக்முதுல்லா 29 ஓட்டங்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித்கான் 3 விக்கெட்டுகளும், ஷாபூர் ஜாத்ரான் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

3 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ரஷித்கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

AP
AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்