துடுப்பாட்ட மட்டையின் கைப்பிடியில் இருந்த ஆபாச வார்த்தை: சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லரின் துடுப்பட்ட மட்டையில் இருந்த ஆபாச வார்த்தையால் சர்ச்சை வெடித்துள்ளது.

இங்கிலாந்தின் லீட்சில் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்கள் குவித்தார்.

அவர் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவரது மட்டையின் கைப்பிடியில் முகம் சுழிக்கும் வகையில் ஆபாச வார்த்தை இருந்தது. இது தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். சமூக வலைதளங்களில் அந்த வார்த்தை குறித்து கண்டனங்கள் எழுந்தன.

ஐ.சி.சி-யின் அனுமதி பெறாமல் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் யாரும் தங்களது சீருடை, மற்றும் துடுப்பாட்ட மட்டை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களில் எத்தகைய வாசகத்தையும் எழுதக்கூடாது என்பது வீரர்களின் நடத்தை விதிமுறையாகும்.

ஆனால், ஜோஸ் பட்லர் அந்த விதிமுறையை மீறியுள்ளதால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜோஸ் பட்லர் இதுதொடர்பாக கூறுகையில், ‘விளையாடும் போது எனக்கு தானே உத்வேகம் அளிக்கவே இது மாதிரி எழுதினேன். மற்றபடி யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers