புதிய வரலாறு படைக்குமா இலங்கை? இன்று மேற்கிந்திய தீவுகளுடன் முதல் டெஸ்ட்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்குகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி தினேஷ் சண்டிமல் தலைமையில், மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக ஹோல்டர் செயல்பட உள்ளார். அவரது தலைமையில் மேற்கிந்திய தீவுகள் இந்த ஆண்டில் விளையாடும் முதல் டெஸ்ட் இதுவாகும்.

இலங்கை கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. எனவே, தொடரை வெல்லும் முனைப்புடன் இலங்கை அணி செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A.M.AHAD/AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers