கிரிக்கெட்டில் டோனி மட்டுமே செய்துள்ள வித்தியாசமான சாதனை: என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்
232Shares
232Shares
lankasrimarket.com

சர்வதேச கிரிக்கெட்டில் வேறு எந்தவொரு வீரரும் செய்யாத சாதனையை இந்திய வீரர் டோனி செய்துள்ளார்.

மகேந்திர சிங் டோனி மிக சிறந்த துடுப்பாட்ட வீரர் மட்டுமல்லாது சிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்கிறார்.

தனது சிறந்த கேப்டன்சியால் ஒருநாள், டெஸ்ட், டி20 என்று மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் வென்று கொடுத்தவர் டோனி.

இவையெல்லாம் பொதுவாக அனைவரும் அறிந்தது தான், ஆனால் டோனி மட்டுமே செய்த சாதனை ஒன்று உள்ளது.

அதாவது விக்கெட் கீப்பரான டோனி அவ்வபோது பந்துவீசவும் செய்வார்.

அவர் 9 சர்வதேச போட்டிகளில் 132 பந்துகளை வீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

ஒரு விக்கெட் கீப்பரால் வீசப்பட்ட அதிகமான பந்துகள் இதுதான். சர்வதேச அளவில் வேறு எந்த வீரரும் அந்த சாதனையை செய்ததில்லை.

இலங்கையின் குமார் சங்ககாரா, தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் போன்ற சில விக்கெட் கீப்பர்கள் அவ்வபோது பந்து வீசியிருந்தாலும் இந்த சாதனையை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்