டோனி அன்று அடித்த சிக்ஸரை மறக்கவே முடியாது! இந்திய அணிக்காக வேண்டிய ஆப்கான் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
458Shares
458Shares
ibctamil.com

உலகக் கிண்ண போட்டியின் போது இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என அல்லாவிடம் வேண்டியதாக ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் கூறியுள்ளார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி 14-ஆம் திகதி துவங்குகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி வீரரும், விக்கெட் கீப்பருமான முகமது சாஷாத், கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் டோனி ஆடிய போட்டி தான் அவர் ஆடிய போட்டிகளிலே மிகவும் பிடித்தமான போட்டி.

போட்டியில் இறுதி ஓவரின் போது இந்திய அணியின் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அன்று ரம்ஜான் நோன்பு நேரம் வேறு, விரைவில் உணவு அருந்திவிட்டு தூங்க வெண்டும், ஆனால் 5 நிமிடம் வழக்கமான தூக்கத்தை தள்ளிப்போட்டு விட்டு இறுதி ஓவரை பார்த்தேன்.

அப்போது டோனி அடித்த அந்த சிக்ஸ் இன்றும் என் கண்ணிலே நிற்கிறது. டோனி அன்றைய போட்டிக்கு முன்பு நல்ல நிலையில் இல்லை.

இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று அல்லாவிடம் வேண்டினேன். நான் நினைத்தது போன்றே இந்தியாவும் வெற்றி பெற்றது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்