56 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம் பெற்ற மூன்று தமிழக வீரர்கள்: அசத்தி வரும் தருணம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியில் 56 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று தமிழக வீரர்கள் இடம் பிடித்து சாதித்து காட்டியுள்ளனர்.

இந்திய-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 347 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் அணியில் 56 ஆண்டுகளுக்கு பிறகு தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஸ்வின் போன்ற மூன்று தமிழக வீர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் தினேஷ் கார்த்திக் சமீபகாலமாக அனைத்து விதமான போட்டிகளிலும் அற்புதமாக விளையாடி வருகிறார். அதே போன்று முரளி விஜய் இந்திய அணிக்கான டெஸ்ட் போட்டியில் தன்னுடைய இடத்தை கெட்டிய பிடித்து அசத்தி வருகிறார்.

சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சமீபகாலமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறினார்.

தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதால், இதை பயன்படுத்தி அவர் மீண்டும் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்து கொள்ளலாம்.

இதற்கு முன்னர் கடந்த 1961-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கிரிபால் சிங், மில்கா சிங், விவி குமார் ஆகிய மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers