கோஹ்லியின் அறிமுகப் போட்டியில் மரணமடைந்த தந்தை: தந்தையர் தினத்தில் உருக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி தந்தையர் தினத்தன்று தன்னுடைய அப்பாவுடன் இருப்பது போன்று சிறுவயது புகைப்படத்தை டுவிட்டர் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் கடந்த 17-ஆம் திகதி தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது முக்கிய பிரபலங்கள் பலரும் தங்கள் தந்தையுடன் இருப்பது தொடர்பான புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, தந்தையின் நினைவுகளை குறிப்பிட்டிருந்தனர்.

இதே போன்று இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அப்பாவுடன் சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அதில், இந்த தந்தையர் தினம் மறக்கமுடியாத ஒரு நாளாகும், உங்கள் தந்தையுடன் இந்த தினத்தை சிறப்பானதாக ஆக்குங்கள்.

ஆரம்பத்தில் இருந்து கடினமாக உழைக்கவும், என் சொந்த கடின உழைப்பில் முழு நம்பிக்கை வேண்டும் எனவும், மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்க கூடாது என்பதையும் எனக்கு, அவர் கற்று கொடுத்தார். அந்த பாடம் இப்போது என் வாழ்வில் முக்கியமாகிவிட்டது. அவர் சரியான திசையில் என்னை வழிநடத்தினார் நன்றி அப்பா என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கோஹ்லி கடந்த 2006-ம் ஆண்டு 16 வயது இருக்கும் போது கர்நாடகா – டெல்லி இடையேயான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி கொண்டிருந்த போது, அவரது தந்தை மரணமடைந்ததை உருக்காம கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers