ஸ்மித்-வார்னர் குரல் கொடுத்தார்களா? இலங்கை வீரர் சண்டிமலுக்கு காத்திருக்கு மிகப் பெரிய தண்டனை

Report Print Santhan in கிரிக்கெட்

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக இலங்கை அணித்தலைவர் சண்டிமலுக்கு பெரிய தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணித் தலைவர் சண்டிமல் பந்தை சேதப்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு ஒரு போட்டி விளையாடத் தடையும் நூறு சதவீதம் சம்பளத்தை அபராதமாகமும் விதிக்கப்பட்டது.

சண்டிமல் போட்டியின் போது செயற்கை திரவம் வைத்து பந்தை சேதப்படுத்தியது தொடர்பான வீடியோவும் வெளியாகியிருந்தது.

தான் குற்றமற்றவன் என சண்டிமல் ஐசிசியிடம் தெரிவித்த போதும் ஐசிசி அதை ஏற்க மறுத்து அவருக்கு அபராதமும், ஒரு போட்டி விளையாட தடையும் விதித்தது.

இது ஐசிசி.யின் 2.3.1 விதியை மீறியிருப்பதாக ஒரு நீதிபதியும், 3வது விதி மீறியிருப்பதாக மற்ற ஒருவரும் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக 3 அபராத புள்ளியும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே பிரச்சனை குறித்து வரும் ஜுலை 10-ஆம் திகதி மேலும் ஒரு தீர்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதில் 4 அல்லது 8 இடைநீக்க புள்ளிகள் வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இதே போன்று பந்தை சேதப்படுத்தியது விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித்-வார்னர் ஆகியோருக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது.

அதாவது ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டும், பேன்கிராப்டுக்கு 7 மாதங்களும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கபட்டது.

இதனால் தற்போது அவர்களும் இந்த விவகாரம் குறித்து குரல் எழுப்பியுள்ளதாகவும், இதன் காரணமாக சண்டிமலுக்கு மிகப் பெரிய தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...