இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வு: ஒப்புதல் வழங்கிய பிசிசிஐ

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு, கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட சம்பள பாக்கியை வீரர்களுக்கு வழங்க பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய உயர்வு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி A+ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடியும், ’A’ பிரிவில் உள்ளவர்களுக்கு 5 கோடி, ’B’ பிரிவில் உள்ளவர்களுக்கு 3 கோடி மற்றும் ’C’ பிரிவில் உள்ளவர்களுக்கு ஒரு கோடி என ஆண்டு ஊதியம் உயர்த்தப்பட்டது.

இந்திய வீரர்களின் போராட்டத்திற்கு பிறகே இந்த ஊதிய உயர்வு கொண்டு வரப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இந்நிலையில், இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. அதற்காக இன்று இங்கிலாந்துக்கு புறப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஊதிய உயர்வை வீரர்கள் பெறவில்லை என்ற தகவல் வெளியானது. இதற்கிடையில், புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பொறுப்பு நிர்வாகிகள் கூடி முடிவெடித்தனர்.

அந்த கூட்டத்தில், வீரர்களுக்கான உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க நிர்வாகிகள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பள பாக்கியை வீரர்களுக்கு பி.சி.சி.ஐ வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்